கல்யாணம் பண்ண பயமா இருக்கு.. இதான் காரணம் - ஷாக் கொடுத்த சிம்பு!
திருமணம் குறித்த சர்ச்சை பேச்சுக்களுக்கு நடிகர் சிம்பு வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
சிம்பு
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி, சிம்பு நடித்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இதில், சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட புரோமோஷன் தொடர்பான பேட்டி ஒன்றில் தான் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்ற காரணத்தை சிம்பு வெளிப்படுத்தியுள்ளார்.அதில் இதுவரை ஜாலியான படங்களில் நடித்து வந்த நான் முதன்முதலாக நிஜ வாழ்க்கையை பதிவு செய்யும் சீரியஸான படத்தில் நடித்துள்ளேன்.
கல்யாண பேச்சு
இது பொழுதுப்போக்கு , சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்து இருக்கும். இப்படி ஒரு படத்தின் நான் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்த நிலையில் அதனை ரசிகர்கள் வரவேற்பார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
19 வயது சிறுவன், இளைஞர், நடுத்தர வயது என 3 விதமான தோற்றத்தில் நடித்துள்ளேன். நான் இன்னும் நடிகனாக நடிப்பு பசியோடு காத்திருக்கிறேன். ஆன்மீகத்தில் கவனம் செலுத்துகிறேன். வயதின் காரணமாக முதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
காத்திருக்கிறேன்..
மேலும் எனது திருமணம் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது. அவரை காதலிக்கிறேன், இவரை காதலிக்கிறேன் என பரப்புகிறார்கள். 19 வயதில் இருந்தே இதுபோன்ற விஷமத்தனமான பிரசாரங்களை தாண்டி வந்துள்ளேன்.
தனது மகனை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படுவது போல என தாயும், தந்தையும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் எனக்குத்தான் பயமாக உள்ளது. காரணம் அவசரக்கோலத்தில் திருமணம் செய்து,
அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை, விவாகரத்து என பிரச்சினைகள் வரக்கூடாது என்ற பயத்தில் தான் அதனை தள்ளிப்போடுகிறேன். எனக்கான துணை வரும் வரை காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக அநுரவிற்கு கிடைத்த வெற்றிவீதம் : சுட்டிக்காட்டிய சுமந்திரன் IBC Tamil
