அப்படி மட்டும் நடிக்கவே மாட்டேன்... செம்ம ஆஃபர்க்கு நோ சொன்ன சிம்பு! ஏன்?

Silambarasan Only Kollywood Gossip Today
By Sumathi 3 மாதங்கள் முன்

மதுபான நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க நடிகர் சிம்பு மறுப்பு தெறிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

சிம்பு 

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த 'மாநாடு' படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்று அவரது நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் உயர்த்தியது.

அப்படி மட்டும் நடிக்கவே மாட்டேன்... செம்ம ஆஃபர்க்கு நோ சொன்ன சிம்பு! ஏன்? | Simbu Rejects The Offer To Act In Alcohol Ad

இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சிம்பு பிஸியான நடிகராக மாறிவிட்டார். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் என அடுக்கடுக்காக குவிந்துகொண்டே வந்தது.

வெந்து தணிந்தது காடு

இதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெளியாகி இருந்த படம் மகா. இந்த படத்தின் நாயகியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருந்தது. இதை அடுத்து ஆகஸ்ட் மாதம் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகிறது.

அப்படி மட்டும் நடிக்கவே மாட்டேன்... செம்ம ஆஃபர்க்கு நோ சொன்ன சிம்பு! ஏன்? | Simbu Rejects The Offer To Act In Alcohol Ad

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றன. அதேபோல் இந்த படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள பத்து தல படத்தில் சிம்பு நடிக்கிறார்.

பிரபல விளம்பரம்

இந்தப் படத்தில் சிலம்பரசனுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். இந்த நிலையில் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று நடிகர் சிம்பு கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

திரையுலக பிரபலங்கள் சினிமாவில் நடிப்பதை தாண்டி விளம்பரங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் முன்னணி மது தயாரிப்பு நிறுவனம் ஒன்று சிம்புவை தங்களுடைய விளம்பரத்தில் நடிக்க சொல்லி கேட்டிருந்தார்கள்.

அதற்கு கோடி ரூபாய் பணம் கொடுப்பதாக கூறி இருந்தார்கள். ஆனால், சிம்பு அவர்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் நான் மது விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார். சிம்புவின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.