ஷூட்டிங்கில் நடிகையிடம் சில்மிஷம் செய்த சிம்பு!! விரட்டி அடித்த டி.ஆர் !!
நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது Thug Life மற்றும் STR 48 படத்தில் நடித்து வருகின்றார்.
சிம்பு
சின்ன குழந்தையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக முன்னேறியுள்ளார் சிம்பு என்கிற சிலம்பரசன். தந்தை டி.ஆர் போலவே பல திறமைகளை கொண்டுள்ள சிம்பு, இடையில் உடலெடை அதிகரிப்பு, தொடர் தோல்வி, தயாரிப்பாளருடன் பிரச்சனை என சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கிய சூழலும் இருந்தது.
ஆனால், அனைத்தையும் சரி செய்து மீண்டும் vintage சிம்புவாக "மாநாடு" படம் மூலமாக மிக பெரிய ஹிட் கொடுத்தார். அதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களும் வெளியாகின.
தற்போது சிம்பு நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் "STR 48" மற்றும் ,மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் "Thug Life" போன்ற படங்கள் ஷூட்டிங் நடைபெற்று வருகின்றது. சிம்புவும் சர்ச்சைகளும் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றது.
அதுவும் அவருக்கு நடிகைகளுடன் நெருங்கிய பழக்கம் என்பது அடிக்கடி பேசப்பட்டு வரும் விஷயமாகவே இருக்கின்றது. சிம்புவை பற்றிய ஒரு சம்பவத்தை பத்திரிக்கையாளர் கோடங்கி சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகையிடம் சில்மிஷம்
அதில், டி ராஜேந்தர் கெளதமியை வைத்து இயக்கிய படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிம்பு நடித்திருந்தார். சூட்டிங்கின் போது சிம்பு, கெளதமியிடம் சில்மிஷம் செய்தாராம். விஷயமறிந்த டி.ராஜேந்தர், படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிம்புவை விரட்டிவிரட்டி அடித்திருக்கிறாராம்.
பின் அழுந்து கொண்டே சிம்பு வீட்டிற்கு செல்ல டி ராஜேந்தர் மனைவி உஷா என்ன என்று கேட்டிருக்கிறார்.
தகவல் அறிந்த உஷா, இதற்காக டி.ராஜேந்தரிடம் கடும் கோபமும் அடைந்துள்ளார்.இது உண்மையா என்பது தற்போது வரை தெரியவில்லை. ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என்று பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.