அடடே..'தக் லைஃப்’ படத்தில் சிம்புவும் நடிக்கிறாரா? லீக்கான photo - ரசிகர்கள் உற்சாகம்!
தக் லைஃப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் படப்பிடிப்பில் நடிகர் சிம்புவும் இணைந்துள்ளார்.
தக் லைஃப்
36 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் - மணி ரத்னம் இணைந்துள்ள படம் தான் ‘தக் லைஃப்’. இதனில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இவர்களுடன் நடிகர் சிம்புவும் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக, மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு முன்பு ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் கமலுடன் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசையை இருப்பதாக சிம்பு வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தில் சிம்பு
இந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் கமல்- மணி ரத்னம் இருவரும் சிம்புவுக்கு தக் லைஃப் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளனர். படப்பிடிப்புத் தளத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதனையடுத்து சிம்பு இந்த படத்தில் இணைந்திருப்பதை படக்குழு புரொமோ மூலம் அதிகார்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கமல் தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘எஸ்.டி.ஆர். 46’ படம் என்ன ஆன்பது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil