31 வயது நடிகையுடன் டேட்டிங் - ஒருவழியாக சிம்புவுக்கு விரைவில் திருமணம்?
சிம்புவுக்கும், நடிகை ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் தனது அசாத்திய திறமையால் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவருடைய திருமணம் குறித்த தகவலும் இணையத்தில் அவ்வபோது வைரலாவது வழக்கமான ஒன்று.
விரைவில் திருமணம்?
இதற்கிடையில், ணிரத்னம் - கமல் ஹாசன் இணைந்திருக்கும் தக் லைஃப் படத்தில் முக்கிய ரோலை ஏற்றுள்ளார். தனையடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில், ஈஸ்வரன் படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோயின் நிதி அகர்வாலுடன் சிம்புவுக்கு காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அது வெறும் கிசுகிசுதான் என்பது தெரியவந்தது. ஆனால், தற்போது மீண்டும் சிம்புவுக்கும் நிதி அகர்வாலுக்கும் விரைவில் திருமணம் என்று பேச தொடங்கியுள்ளனர்.