மீண்டும் மோதும் சிம்பு-தனுஷ் - பரபரப்பில் ரசிகர்கள்!
சிம்பு - தனுஷ் படங்கள் ஒரே நாளில் மோத உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
சிம்பு - தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சிம்பு - தனுஷ். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், இவர்களது ரசிகர்கள் சண்டையிட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.

தற்போது சிம்பு, தனுஷ் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளன. நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார்.
வெல்லப்போவது யார்
ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அன்றைய தினம் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படமும் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சிம்பு - தனுஷ் படங்கள் ஒரே நாளில் மோத உள்ளதால், எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
விரைவில் இப்படங்களின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல பெண்களுடன் உல்லாசம்...ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவார் - காதலன் திருமணத்தை நிறுத்த பெண் புகார்!
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil