சில்க்கின் வாழ்க்கை வரலாறு படத்துல இவங்களா? வாயை பிளக்கும் ரசிகர்கள்!
சில்க்கின் வாழ்க்கை வரலாற்றில் நடிகை டாப்ஸி நடிக்க இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில்க் ஸ்மிதா
முதல் படத்தில் சிலுக்கு என்ற பெயரில் இவர் நடித்த நிலையில், நாளடைவில் இதுவே இவரது பெயரும், அடையாளமுமாக மாறியது.தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர்,
திரையுலகில் அடியெடுத்து வைத்து 4 ஆண்டுகளிலேயே 200 படங்களில் நடித்தவர் என்கிற பெருமைக்கு உரியவர். முன்னனி நடிகைகளுக்கு டஃப் கொடுத்தவர். இன்றளவும் தமிழ் திரையுலகில் இவரின் இடத்தை நிரப்ப யாரும் இல்லை...
தி டர்ட்டி பிச்சர்
இவருக்கு நிகர் இவரே என்ற நிலையை ஆழ பதித்துச் சென்றவர். நடிகை சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்து கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இவரது மறைவுக்கு கடன் பிரச்சனை, காதல் தோல்வி என பல காரணங்கள் கூறப்பட்டாலும், இதுவரை சரியான காரணங்கள் வெளியாகவில்லை.
இவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தியில் எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிச்சர்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில், பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.
நடிகை டாப்ஸி
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தில், முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததால் தற்போது டாப்ஸி அந்த கேரக்டரில் நடித்த சம்மதித்திருக்கிறார்.
தமிழில் தனுஷின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பல்வேறு சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் டாப்ஸி தற்போது சில்க்கின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.