வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது இதுதான்! நடிகை டாப்ஸி கிண்டல்

house income tax taapsee
By Jon 1 வருடம் முன்

தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது குறித்தும், அவர்கள் எடுத்துச் சென்றது குறித்தும் கிண்டலாக பதிவிட்டுள்ளார் நடிகை டாப்ஸி. பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி உட்பட பிரபலங்களின் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதில் பல கோடி ரூபாய் பணமோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் நடிகை டாப்ஸியின் வீட்டிலிருந்து, 5 கோடி ரூபாய்க்கான காசோலையையும் எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் டுவிட்டரில், 3 நாட்கள், 3 விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை நடந்தது.

1. பாரிஸ் நகரில் எனக்குச் சொந்தமாக ஒரு பங்களா இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை விடுமுறை நாட்கள் வரப்போகின்றன.

2. என் பெயரில் இருப்பதாகச் சொல்லப்படும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரசீது. அதை எடுத்து ஃப்ரேம் செய்து மாட்ட எதிர்காலத்தில் எனக்குத் தரப்போகிறார்கள். ஏனென்றால் அந்தப் பணம் வேண்டாம் என்று நான் ஏற்கெனவே மறுத்தேன். 2. நமது மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013ஆம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையைப் பற்றிய என் நினைவுகளைத் தேடினார்கள்.

பி.கு: இனி நான் மலிவானவள் இல்லை என்று டாப்ஸி பகிர்ந்துள்ளார்.

இவரது இந்தப் பதிவைப் பகிர்ந்தும், பாராட்டியும் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.