டாட்டூ போட்டிருக்கீங்களா? அப்போ இந்த சரும பிரச்சனைகள் ஏற்படலாம்.. உஷார்!
டாட்டூ குத்துவதால் சருமத்தில் ஏற்படும் அபாயங்கள் குறித்து காணலாம்.
டாட்டூ
பழங்கால பச்சைகுத்தும் முறையானது தற்போது தனது என்ற பெயரில் உருமாறியுள்ளது எனலாம். இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை டாட்டூ மீது கொண்ட பற்று இப்போதைய ஃபேஷன் ஆக கருதப்படுகிறது.
குறிப்பாக விருப்பமானவர்களின் பெயர்கள், தெய்வம்,விலங்குகளின் வடிவம் என விருப்பமானவற்றை வரைந்துகொள்ளும் முறை இந்த தலைமுறையினரிடம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் டாட்டூ குத்திகொள்வது பெருமையாக பார்க்கப்படுகிறது.
இந்த அளவுக்கு தாக்கத்தை கொண்ட டாட்டூ டிசைன்கள் சருமத்தில் நிரந்தரமாக இருந்து உடலுக்கு என்ன மாதிரியான தீமைகளை அளிக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
டாட்டூவால் ஒவ்வாமை
ஒவ்வாமை எதிர்வினைகள் பச்சை குத்திய பிறகு சிலருக்கு ஏற்படும். அதில் பயன்படுத்தப்படும் மெயில் பிளாஸ்டிக் இருந்தால் மை சிவப்பு, மஞ்சள்,நீலம், மற்றும் பச்சை நிறமிகள் ஒவ்வாமை ஏற்படுத்தும். அதன்அறிகுறிகளாக, சிவப்பு சொறி, படை நோய், கடுமையான அரிப்பு போன்றவை ஏற்படும்.
ஒரு சில சமயங்களில் வீக்கம் கூட ஏற்படலாம். இந்த விளைவுகள் பச்சை குத்திய பின் பல ஆண்டுகளுக்கு நீடிக்குமாம். அதேபோல டாட்டூ குத்தும்போது ஏற்படும் வடு குணமடையாமல் இருந்தால் அதில் தொற்று உருவாகி கெலாய்டு வடுக்களை உண்டு செய்யும்.
டாட்டூவால் தொற்று
பச்சை குத்துவது ஓரு கலை என்று பார்த்தாலும் இதன் தொழில்நுட்ப முறை தோலில் காயத்தை உண்டாக்குகிறது. தோலின் மேல் எபிடெர்மல் மற்றும் நடுத்தர் தோல் அடுக்குகள் உள்ளது. மை வைத்த பிறகு தோல் மீட்கப்பட வேண்டும். அதற்கான குறிப்புகளை டாட்டூ நிபுணர் வழங்குவார்.
எனினும் ஊசிபோடும் முன் நீர் மையுடன் கலந்தால் தொற்று ஏற்படலாம். முதல் இரண்டு வாரங்களில் டாட்டு குத்திய உடன் தோல் தொற்று பாதிப்பு இருக்கும். இந்த நிலையில், சருமம் சிவத்தல், அரிப்பு, வெளியேற்றம் போன்றவை இருக்கும். சிலருக்கு வீக்கம் இருக்கும். நோய்த்தொற்று பரவினால் காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளும் இருக்கும்.
டாட்டூ ஊசியில் கிருமி
டாட்டூ நிபுணர்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசிகளை தான் உபயோகிப்பார்கள் என்றாலும் நாம் தேர்ந்தெடுக்கும் நிபுனர் அவற்றை முறையாக செய்கிறாரா என்று சரிபார்த்துகொள்வது அவசியம். பலர் இதனை கவனிப்பது இல்லை.கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசிகளை பயன்படுத்தாமல் டாட்டூ போடும் போது தொறுநோய் அபாயம் அதிகரிக்கும்.
குறிப்பாக ஹெச்.ஐ.வி ஹெபடைடிஸ் சி மற்றும் மெதிசிலின் எதிர்ப்பு , உள்ளிட்ட இரத்தத்தால் பரவும் நோய்களை உண்டாக்குகிறது.
எம்ஆர்ஐ பரிசோதனை சிக்கல்
டாட்டூ குத்திய பிறகு நமது உடலை ஏதேனும் பரிசோதனைக்கு உட்படுத்த வாய்ப்புகள் இருக்கு. குறிப்பாக MRI பரிசோதனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதன் கதிர்கள் நீங்கள் பச்சை குத்தலுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு உண்டு. சில பக்கவிளைவுகளில் வீக்கம் மற்றும் அரிப்பு போன்றவை இருக்கலாம்.
எனினும் இவை தானாக சரியாகும் . அதே நேரம் டாட்டுவில் தரம் குறைந்த நிறமிகள் பதிக்கப்பட்டிருந்தால் டாட்டு பழையதாக இருந்தால் எதிர்விளைவு ஆபத்துகள் அதிகரிக்கும். MRI ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டியிருந்து நீங்கள் டாட்டு குத்தியிருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
டாட்டூ மை தீங்கு?
டாட்டூ மை முன்பு இருந்ததை விட பாதுகாப்பானது. இருப்பினும், சில நிறங்களில் அடர் பிரகாசமான நிறங்களுக்கு உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மைகளின் தயாரிப்பில் கடும் தரங்கினாள் கொண்டுள்ளது.
இதை மீறும் போது அதிகமான பாதிப்பை சருமத்தில் உண்டு செய்யலாம். மேலும், 2010ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 65 பச்சை மைகளில் நிக்கல், ஈயம் மற்றும் பிற புற்றுநோயை உண்டாக்கும் முகவர்கள் தடங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் சில மைகளில் கார் பெயிண்ட், பிரிண்டர் மை பயன்படுத்தப்படும் இராசயனங்கள் உள்ளன. அதனால் டாட்டூ போடுவதற்கு முன்பு பாதுகாப்பாக இருக்கவேண்டும்.