Friday, Jul 4, 2025

உடலில் 98 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்த அர்ஜெண்டினா தம்பதி! வைரலாகும் புகைப்படம்

Guinness World Records Argentina
By Nandhini 3 years ago
Nandhini

Nandhini

in உலகம்
Report

உடலில் 98 முறை பச்சை குத்தி அர்ஜெண்டினா தம்பதி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 

அர்ஜெண்டினா தம்பதி கின்னஸ் சாதனை

அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் விக்டர். இவருடைய மனைவி கேப்ரியெல்லா. இத்தம்பதி 98 முறை உடலில் பச்சை குத்தி உலக சாதனை படைத்துள்ளனர்.

உலகின் அதிகமான உடல் உறுப்பு மாற்றங்களை செய்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் இத்தம்பதி. இதுவரை 98 முறை உடலில் பச்சை குத்தியுள்ள இத்தம்பதி, பல வகையான உடல் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ளனர்.     

தற்போது இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

argentina-tatoo-guinness-world-record