ஷூட்டிங்கில் யாருமே அப்படிலாம் பண்ண மாட்டாங்க - ஆனா வடிவேலு!! போட்டுடைத்த நடிகை கௌதமி

Vadivelu Tamil Actors
By Karthick Apr 15, 2024 05:03 PM GMT
Report

நடிகர் வடிவேலுவை குறித்து பலரும் எதிர்மறையான கருத்துக்களையே வைத்து வருகின்றனர்.

வடிவேலு

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு காமெடி நடிகர்கள் பெரிய ஆதிக்கத்தை செலுத்தினார்.அப்படி 2000-ஆம் ஆண்டுகளில் அதிக ஆதிக்கத்தை செலுத்தியவர் வடிவேலு.

side-actress-gowthami-on-acting-with-vadivelu

இன்றளவும் அவரின் காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளது. தொடர்ந்து பல தொலைக்காட்சிகளிலும் தினமும் அவரின் காமெடி காட்சிகளே ஒளிபரப்படுகின்றன. சில காரணங்களால் அவரின் படவாய்ப்புகள் குறைந்த போதிலும், மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் படங்களில் பிஸியாகியுள்ளார் வடிவேலு.

பட வாய்ப்பிற்காக நைட் பார்ட்டி - சினேகாவின் மற்றொரு பக்கம் - அதிரவைத்த பிரபலம்

பட வாய்ப்பிற்காக நைட் பார்ட்டி - சினேகாவின் மற்றொரு பக்கம் - அதிரவைத்த பிரபலம்

அவருடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வரும் பல துணை நடிகர்களும் வடிவேலுவை குறித்து எதிர்மறையான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார்கள். அது வழக்கமான ஒன்றாகவே மாறிப்போயுள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட்டில்..

பலரும் அவரை பயங்கரமாக விமர்சிக்கும் நிலையில், தற்போது அவரை குறித்து அவருடன் பல ஹிட் காமெடி காட்சிகளில் நடித்துள்ள நடிகை கௌதமி சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

side-actress-gowthami-on-acting-with-vadivelu

அவர் இது குறித்து அளித்த பேட்டியில், வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர். காட்சிகளை படப்பிடிப்பு தளத்திலேயே மெருகேற்றுவார். அது குறித்து உடன் நடிப்பவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்குவார்.

side-actress-gowthami-on-acting-with-vadivelu

ஆனால், மற்ற நடிகர்கள் யாருமே இப்படி செய்ய மாட்டார்கள். காமெடி காட்சிகளை சிரியவர்களும் பார்ப்பார்கள், பெரியவர்களும் பார்ப்பார்கள் என்பதால் இரட்டை அர்த்த வசனங்களை எந்த அளவுக்கு நாசுக்காக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு நாசுக்காக சொல்ல வேண்டும் என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிப்படுத்திக் கொள்வார்.