நுங்கு புகழ் ஷர்மிகா; நேரில் விசாரணை - கேன்சல் செய்யப்படும் லைசன்ஸ்?

Chennai
By Sumathi 1 வாரம் முன்

ஷர்மிகா மீது எழுந்த சர்ச்சையில் அவர் இன்று கவுன்சிலில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

ஷர்மிகா சர்ச்சை

பாஜகவின் சிறுபான்மை அணி பிரிவின் தலைவியாக இருப்பவர் டெய்சி சரண். இவரின் மகள் ஷர்மிகா. சித்த மருத்துவரான இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். அவ்வப்போது பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருவார். இவர் அளித்த பல நெறிமுறைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நுங்கு புகழ் ஷர்மிகா; நேரில் விசாரணை - கேன்சல் செய்யப்படும் லைசன்ஸ்? | Siddha Doctor Sharmika In Medical Council Of India

அந்த வகையில், கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும். தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும். ஒரு க்ளோப் ஜாமுன் சாப்பிட்டா, ஒரேநாளில் மூணு கிலோ எடை கூடிவிடும். பீஃப் நம்மவிட பெரிய மிருகம்ங்குறதால அதைச் சாப்பிடக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.

நேரில் ஆஜர்

இந்நிலையில், சித்த மருத்துவ கவுன்சிலின் பதிவாளர் மூலம் டாக்டர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் வந்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ், "மருத்துவ வல்லுநர் குழுவின் ரிப்போர்ட் வந்தபிறகு, ஷர்மிகா கவுன்சிலின் விதிகளை மீறியுள்ளாரா?

என்பதை ஆராய்ந்து தற்காலிகமாக அவரது பதிவு எண்ணைக் கேன்சல் செய்வோம். அது ஆறு மாதமா, ஒரு வருடமா என்பதெல்லாம் வல்லுநர் குழு முடிவு செய்யும்" எனக் கூறினார்.