சித்த மருத்துவர் மற்றும் மனைவி மர்ம நபர்களால் கொடூர கொலை - அதிர்ச்சி சம்பவம்!
சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை
சென்னை ஆவடி அருகே மிட்டனமல்லி தேவர் நகரை சேர்ந்தவர் (72) சித்த மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரசன்னா (60) இவர், மத்திய அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர், இவர்கள் இருவருக்கும் திருமணமும் ஆகி அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். வயது முதிர்ந்த தம்பதிகளான இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நள்ளிரவில் சித்த மருத்துவரான சிவம் நாயர் அவரது மனைவி பிரசன்னா ஆகிய இருவரும் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். இதனையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் பார்த்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கொடூர சம்பவம்
தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். அவர்கள் நேரில் சென்று பார்த்த போது சிவம்நாயர், அவரது மனைவி பிரசன்னாகுமாரி ஆகிய இருவரும் வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
யாரோ சில மர்மநபர்கள், டாக்டர் மற்றும் அவரது மனைவியைகழுத்தை அறுத்து கொலை செய்து தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. கொலைக்கான காரணம் அறியப்படவில்லை. மர்ம நபர்கள் நகையை கொள்ளையடிக்க கொலை செய்தார்களா? அல்லது குடும்ப தகராறில் கொலை செய்யப்பட்டனரா? அவர்களது சாவுக்கு வேறு ஏதும் காரணமா?
என்று பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன காரணம் என்று தெரியாமல் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.