பிரபல சித்தவைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் காலமானார்

medicine tamilnadu salem
By Jon Feb 11, 2021 01:43 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி அந்தரங்க சந்தேகங்களுக்கு பதிலளித்து, இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் சேலம் சித்த வைத்தியர் சிவராஜ். சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம்.

இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பதிலளிக்கும் போது இளைஞர்களை பேராண்டிகளா என அழைப்பது வழக்கம் , இவரது இந்த வார்த்தை இணையத்தில் பிரபலமான ஒன்றாகும். இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிவகுமார், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 .5 மணி அளவில் உயிரிழந்தார்.

பிரபல சித்தவைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் காலமானார் | Siddha Doctor Sivaraj Dead

அவரின் உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் உடல் நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும் என கூறப்படுகிறது.