பரபரத்த மீட்டிங் - முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் தேர்வு!
சித்தராமையா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் முதல்வர்?
கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக காங்கிரஸ் கட்சி உருவெடுத்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கடந்த 4 நாட்களாக ஆலோசனை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்தில் நடந்து வந்தது. இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த மாநில பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா,
வெளியான தகவல்
"தற்போது கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆலோசித்து வருகிறார். காங்கிரஸ் முடிவெடுக்கும் போதெல்லாம் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். அடுத்த 48-72 மணி நேரத்தில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும்.
கர்நாடக முதல்வர் தேர்வு குறித்த ஊகங்கள் அல்லது போலியான தகவல்களுக்கு செவி சாய்க்க வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்”.
இந்நிலையில், தற்போது சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.