கடுமையாக உழைத்த டிகே சிவக்குமார்; ஆனால் பதவி சித்தராமையாவிற்கு - என்ன காரணம்?
டிகே சிவக்குமார் - சித்தராமையா இடையே முதல்வர் பதவிக்கான மோதல் நடந்து வருகிறது.
தொடரும் மோதல்
கர்நாடகாவில் முடிந்த தேர்தலில், பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து, முதல்வர் பொம்மை அங்கே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்று இன்று காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பதவிக்கு அங்கே சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே போட்டி நிலவி வருகிறது. தேர்தல் பணிகளை சிவக்குமார் முழுமையாக ஒருங்கிணைத்தார்.
யார் முதல்வர்?
மத்திய பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் கூட காங்கிரஸ் எம்எல்ஏக்களை காக்க காரணமாக இருந்தார். ஒக்கலிகா பிரிவினர் இந்த முறை எதிர்பார்க்காத அளவிற்கு சிவகுமாருக்கு வாக்களித்துள்ளனர்.
ஆனால் இவருக்கு பதிலாக சித்தராமையாதான் முதல்வராக பதவி ஏற்பார் எனக் கூறபப்டுகிறது. டிகே சிவகுமாருக்கு நிர்வாகிகள் ஆதரவு, மக்கள் பிரபலம் இருந்தாலும் எம்எல்ஏக்கள் ஆதரவு தொடங்கி தொண்டர்கள் ஆதரவு எல்லாம் சித்தராமையாவிற்கே இருக்கிறது.
டிகே சிவக்குமார் கட்சியை உடைக்கும் குணம் கொண்டவர் இல்லை. ஆனால் சித்தராமையா தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றால் கட்சியை உடைக்கும் குணம் கொண்டவர். அவருக்கு இருக்கும் மைனாரிட்டி சப்போர்ட் மிகப்பெரியது. டிகே சிவகுமாரே முதல்வர் பதவிக்கு திட்டமிடவில்லை என்று கூறப்படுகிறது.