காங்கிரஸை விமர்சித்த பாஜக தலைவர் - மோடியை விட்டு விளாசிய சித்தராமையா!

Narendra Modi
By Vinothini May 31, 2023 05:15 AM GMT
Report

கர்நாடகாவின் முதலமைச்சரான சித்தராமையாவை விமர்சித்து பேசிய பாஜக தலைவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ்

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, சித்ததற்கமையா முதலமைச்சராக உள்ளார். அவர் பதவி ஏற்கும்போது, தேர்தலில் கூறிய 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

siddaramaiah-replied-to-bjp-and-speaks-about-modi

அதன்படி பதவியேற்ற நாளில் சித்ததாராமையாவும் கையெழுத்து போட்டு நிறைவேற்றப்படும் என்றார். இந்த நாள் வரை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

இதனை குறிப்பிட்டு பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல், “காங்கிரஸ் அளித்த இலவச திட்டங்களை நம்பியே மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஆனால் அதை நிறைவேற்றாமல் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் 5 திட்டங்களையும் செயல்படுத்தாவிட்டால் பாஜக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்துவோம்” என்று கூறினார்.

பதிலடி

இந்நிலையில், பாஜகவிற்கு பதிலடி குடுக்கும் வகையில் முதல்வர் சித்தராமையா பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், “நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

siddaramaiah-replied-to-bjp-and-speaks-about-modi

அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அந்தந்த துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். எனவே பாஜகவினர் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.

மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார். அவ்வாறு பணத்தை டெபாசிட் செய்தாரா? ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார்.

அதனை மோடி செய்தாரா? விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக மாற்றுவதாக கூறினார். அதை செய்தாரா? நாங்கள் இதையெல்லாம் கேட்டால் பாஜகவினர் மௌனமாகி விடுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.