கோயிலுக்கு வந்த சிறுமி; பாத்ரூமில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - SSI வெறிச்செயல்!
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.எஸ்.ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் கார்த்திகை தீப விழாவிற்கு பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களிலிருந்து போலீசார் கூடுதலாக பணியமர்த்தப்பட்டனர்.
அதில் மதுரை திடீர் நகர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ ஜெயபாண்டி பாதுகாப்பு பணிக்கு வந்திருக்கிறார். அப்போது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்த 14 வயது சிறுமி கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைக்கு சென்றிருக்கிறார்.
எஸ்.எஸ்.ஐ ஜெயபாண்டி சிறுமியை பின் தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் பதற்றமான பெற்றோர், கழிவறைக்கு சென்று பார்த்தபோது அங்கு மயங்கிய நிலையில் மகள் இருந்ததை பார்த்து அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எஸ்.எஸ்.ஐ கைது
அங்கு பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உடனே மதுரை மாவட்ட சைல்ட் லைனில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து சைல்ட் லைன் அலுவலர்களும், போலீசாரும், சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் எஸ்.எஸ்.ஐ ஜெயபாண்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.
அதன் அடிப்படையில், ஜெயபாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர், பின்பு சிறைக்கு அனுப்பப்பட்டார்.