மக்களவை தேர்தல்; மோடியை எதிர்த்து களமிறங்கிய Stand Up காமெடியன் மனு நிராகரிப்பு!
வாராணசிதொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த காமெடியன் ஷியாம் மனு நிராகரிக்கப்பட்டது.
மக்களவை தேர்தல்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இங்கு இறுதி கட்டமான 7வது கட்டத்தில் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மோடி உட்பட 55 பேர் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் பிரபல காமெடியனான ஷியாம் ரங்கீலாவும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
காமெடியன் மனு
போட்டியின்றி வெற்றி என்ற நிலை உருவாகிவிடக்கூடாது என்பதற்காக பிரதமர் போட்டியிடும் தொகுதியில், வேட்பு மனுவை தாக்கல் செய்வதாக ஷியாம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று வேட்புமனுக்கள் நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
அப்போது, ஷியாம் ரங்கீலா உட்பட 38 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஷியாம் ரங்கீலா, ”ஜனநாயகம் எப்படி படுகொலை செய்யப்பட்டது என்பதை நான் பார்க்கிறேன்.
செவ்வாய்க்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்வதை அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தினர். சத்தியப் பிரமாணம் தொடர்பான ஆவணத்தை சமர்ப்பிக்காததால், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.