இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய துணை கேப்டன்? வெளியான தகவல்!

Jasprit Bumrah Indian Cricket Team Shubman Gill
By Sumathi Jul 27, 2024 09:30 AM GMT
Report

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய துணை கேப்டன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை கேப்டன்

டி20 போட்டிகளில் இருந்து ரோகித் ஓய்வு பெற்று விட்டதால் பாண்ட்யா அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

bumrah - shubman gill

புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு விளையாட செல்லும் இந்தியா - பிசிசிஐ-யை கண்டுகொள்ளாத ஐசிசி!

பாகிஸ்தானுக்கு விளையாட செல்லும் இந்தியா - பிசிசிஐ-யை கண்டுகொள்ளாத ஐசிசி!

சுப்மன் கில்? 

அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, ரிஷப் பண்ட் போன்ற சீனியர் வீரர்கள் இருக்கும் வேளையில் அவருக்கு துணைக் கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

indian cricket team

தற்போது டி20 மற்றும் ஒருநாள் துணைக்கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் விரைவில் நடைபெற இருக்கும் வங்காளதேச தொடரின் போது டெஸ்ட் அணிக்கும் துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணைக்கேப்டனாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.