ஓரங்கட்டப்பட்ட ரோகித் சர்மா - இந்திய அணிக்கு கேப்டனான சுப்மன் கில் - அதிகாரபூர்வமாக அறிவித்த BCCI

Karthick
in கிரிக்கெட்Report this article
இந்திய அணி உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்திய அணி
இன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பலமான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இது பெரும் சவாலான போட்டியாகும்.
ரசிகர்கள் ஆவலோடு இந்த போட்டிக்காக காத்திருக்கும் நிலையில், ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் இந்திய அணி, ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர் சுப்மன் கில் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் குமார்.
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் இந்திய வீரர்கள் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.,