பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாற்றம் - 2 முன்னணி வீரர்களை நீக்கும் ரோகித்??

Ravindra Jadeja Rohit Sharma Virat Kohli Indian Cricket Team 2024 T20 World Cup Cricket Tournament
By Karthick Jun 24, 2024 06:46 AM GMT
Report

இந்திய அணி இன்று பலமான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

சூப்பர் 8

இது வரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் 2 போட்டிகள் ஆப்கனிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திற்கு எதிராக விளையாடி 2'யிலும் வெற்றி பெற்றுள்ளது.

Indian team world cup t20 2024

இன்று ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது இந்தியா. ஆஸ்திரேலிய அணி எதிர்ப்பாராத வகையில் ஆப்கனிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது.

கடைசி நேர மாற்றம் - பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்!! கம்பீரை ஒதுக்கும் காரணம்?

கடைசி நேர மாற்றம் - பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்!! கம்பீரை ஒதுக்கும் காரணம்?

அது அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அடுத்த சுற்றிற்கு முன்னேற, இன்று அந்த அணி வெற்றி பெறுவது முக்கியமானதாகும். இதுவரை விளையாடிய போட்டிகளில் இந்தியா அணியில் மாற்றங்களே இல்லை.

India vs Australia world cup t20 2024

ஒரே அணி தான் களமிறங்கி வருகிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றம்

நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜா இது வரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அவரை போல ஒரு அனுபவமான வீரர் அணியில் இருப்பது அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

என்ன ஆடுற நீ? சொதப்பலாக அவுட்டாகிய பண்ட் - கோபத்தை கொட்டி தீர்த்த விராட்!!

என்ன ஆடுற நீ? சொதப்பலாக அவுட்டாகிய பண்ட் - கோபத்தை கொட்டி தீர்த்த விராட்!!

இருப்பினும், பேட்டிங்கில் தொடர்ந்து ஜடேஜா தடுமாறி வருவது வெளிப்படையாகவே தெரிகிறது. அதே போல, விமர்சனங்களை பெற்று வந்த துபே, வங்காளதேசத்திற்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டார்.

Ravindra Jadeja world cup t20 2024

இந்த சூழலில் தான், அணியில் மாற்றம் இருக்கும் என கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால், ரோகித் சர்மா இதுவரை எதிர்கொண்ட அணிகளிலேயே மிகவும் பலமான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மாற்றத்தை செய்வார் என்பது சற்றும் நடக்காத ஒன்றே ஆகும்.