சுப்மன் கில் சகோதரியுடன் ஊர் சுற்றிய ரிங்கு சிங் - வைரலாகும் வீடியோ!
சுப்மன் கில் சகோதரியுடன் ரிங்கு சிங் ஊர் சுற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
ரிங்கு சிங்
டி20 தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றது.
இந்த டி20 தொடரில் ரிங்கு சிங் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இந்நிலையில், ரிங்கு சிங் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வைரல் ஃபோட்டோ
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில்லின் சகோதரி ஷானில் கில். ஜிம்பாப்வேவில் உள்ள இவர், இந்திய அணியின் ரிங்கு சிங்குடன் ஊர் சுற்றிய சம்பவம் தெரிய வந்துள்ளது. அதுகுறித்த வீடியோவை ஷானில் கில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இது ரசிகர்களிடையே வைரலானதை தொடர்ந்து அதனை ஷானில் கில் நீக்கியுள்ளார். இதனால் இருவரும் காதலித்து வருகின்றனரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.