சச்சின் மகளுடன் டேட்டிங்கா? மௌனம் கலைத்த சுப்மன் கில்
தன்னை பற்றி வந்த டேட்டிங் வதந்தி குறித்து சுப்மன் கில் பேசியுள்ளார்.
சுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணி வீரரான சுப்மன் கில், 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
அவரது தலைமையிலான குஜராத் அணி, 8 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதனிடையே, சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது, அதன் பின்னர் நடிகர் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கானுடன் டேட்டிங்கில் இருந்ததாக தகவல் வெளியானது.
டேட்டிங் வதந்தி
இந்நிலையில், சுப்மன் கில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தன்னை பற்றி வந்த டேட்டிங் வதந்திகள் குறித்து விளக்கமளித்துள்ளார். இதில் பேசிய அவர், "நான் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தனியாகவே இருந்து வருகிறேன். ஆனால் என்னை பலரோடு தொடர்பு படுத்திவதந்திகள் மற்றும் யூகங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
Shubman Gill finally broke his silence on the Sara Tendulkar dating rumours, saying he is fully focused on his cricket career. pic.twitter.com/A1aFZYG9fz
— Vipin Tiwari (@Vipintiwari952) April 27, 2025
இது அபத்தமானது. நான் அவர்களை நேரில் சந்தித்ததோ, பேசியதோ கூட கிடையாது.நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். ஒருவருடனான உறவில் நேரம் முதலீடு செய்ய முடியாது" என தெரிவித்துள்ளார்.