பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல்
கிரிக்கெட் வீரர்கள் சிலர் தனக்கு தொல்லை அளித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகள் அனயா பங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அனயா பங்கர்
இந்திய கிரிக்கெட் அணியில் 2001-2004 காலகட்டத்தில் விளையாடி வந்தவர் சஞ்சய் பங்கர். ஓய்வுக்கு பிறகு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.
அதன் பிறகு 2008, 2009 ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். பின்னர் 2021 ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார்.
இவரின் மகனான ஆர்யன் சில ஆண்டுகளுக்கு முன்னர், தான் பெண்ணாக மாற விரும்புவதாக கூறி, ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின்னர் தனது பெயரை அனயா பங்கர் என மாற்றிக்கொண்டார்.
பாலின மாற்றத்தால் தொல்லை
இந்நிலையில், பாலின மாற்றத்தின் போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதில் பேசிய அவர், "8 - 9 வயதாக இருக்கும் போதே நான் ஒரு பெண்ணாக உணர்ந்து, அம்மாவின் உடைகளை அணிந்து ஆடைகளை அணிந்து, கண்ணாடி முன் நின்று நீ ஒரு பெண் என எனக்கு நானே கூறிக்கொள்வேன்.
அப்பா பிரபலமானவர் என்பதால் இதை மறைத்து வைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. நான் ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளேன்.
ஆனால் அனைவரிடமிருந்தும் எனது பாலினத்தை மறைக்க வேண்டியிருந்தது. காரணம் கிரிக்கெட்டில் ஒரு தீங்கு விளைவிக்கும் ஆணாதிக்கம் நிலவி வருகிறது.
படுக்கைக்கு அழைத்தார்
ஒரு கிரிக்கெட் வீரர் எனக்கு அவருடைய நிர்வாண புகைப்படத்தை அனுப்பியுள்ளார். ஒருவர் மற்றவர்களிடம் என்னை ஆதரித்து பேசி விட்டு, தனியாக என்னிடம் வந்து என்னுடைய புகைப்படத்தை கேட்டார்.
இந்த கொடுமைகளை பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் கூறிய போது, "அவர் என்னுடன் காரில் வா ஒன்றாக இருக்கலாம் என கூறிவிட்டு, என்னை படுக்கைக்கு அழைத்தார்" என கூறியுள்ளார்.
அனயா பங்கர், தனது தந்தையை போல் கிரிக்கெட் வீரராக மாற ஆசைப்பட்டு, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால், சர்வதேச மகளிர் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்க கூடாது என சில ஆண்டுகளுக்கு முன்னர் தடை விதித்ததால் அனயாவின் ஆசை முடிவுக்கு வந்தது. தற்போது அனயா பங்கர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.