ராஷ்மிகா மந்தனா மீது க்ரஷ் - உண்மை உடைத்த சுப்மன் கில்

Rashmika Mandanna Shubman Gill
By Sumathi Mar 09, 2023 10:43 AM GMT
Report

சுப்மன் கில்லுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மீது க்ரஷ் இருப்பதாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது.

ராஷ்மிகா மந்தனா

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரராக இருப்பவர் சுப்மன் கில் (23) . இவர் அதற்குள்ளேயே பல்வேறு சாதனைகளை படைக்க தொடங்கி விட்டார். இந்நிலையில், சுப்மன், நடிகை ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு கிரஷ் இருப்பதாக கூறியதாக செய்திகள் வெளியாகின.

ராஷ்மிகா மந்தனா மீது க்ரஷ் - உண்மை உடைத்த சுப்மன் கில் | Shubman Gill Clarifies Crush On Rashmika Mandanna

இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சுப்மன்கில்லிடம் அதுகுறித்து கேட்டு வந்தனர். இந்த பதிவுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்மன்கில் இது எந்த ஊடகத்தில் பேசப்பட்டது? இதுகுறித்து எனக்கே எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

சுப்மன் கில்

முன்னதாக, சுப்மன்கில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை காதலிக்கிறார் என தகவல் பரவியது. அதன் பிறகு நடிகை சாரா அலி கானுடன் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் பரவியது. நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

ராஷ்மிகா மந்தனா மீது க்ரஷ் - உண்மை உடைத்த சுப்மன் கில் | Shubman Gill Clarifies Crush On Rashmika Mandanna

அதன்பின் தெலுங்கு, தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.