நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து இழுத்து உடலை தொட்டு பார்த்து அத்துமீறிய ரசிகர்கள்

Rashmika Mandanna Mumbai
By Thahir Sep 08, 2022 06:00 AM GMT
Report

தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

இவர் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

அத்துமீறிய ரசிகர்கள் 

தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா மும்பையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

கோவிலுக்கு ராஷ்மிகா வந்ததை அறிந்து ஏராளமான ரசிகர்கள் திரண்டர். பின்னர் ராஷ்மிகா கோவிலை விட்டு வெளியே வந்த போது ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து இழுத்து உடலை தொட்டு பார்த்து அத்துமீறிய ரசிகர்கள் | Fans Tried To Molest Actress Rashmika

அப்போது நடிகை ராஷ்மிகாவை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்யடித்தனர். ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாவலர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

அப்போது ரசிகர்கள் சிலர் ராஷ்மிகாவின் கையை பிடித்து இழுத்தும் உடலில் தொட்டு பார்த்தும் அத்துமீறலில் ஈடுபட்டனர். 

பின்னர் அவர் உடனடியாக பாதுகாவலர்களின் உதவியுடன் காரி ஏறி சென்றார்.