சர்வதேச போட்டியில் முதல் சதம் - மிரட்டிய சுப்மன் கில்

Indian Cricket Team Shubman Gill Zimbabwe national cricket team
By Sumathi Aug 22, 2022 12:05 PM GMT
Report

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 289 ரன்கள் குவித்தது. 

மூன்றாவது ஆட்டம்

ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. 

சர்வதேச போட்டியில் முதல் சதம் - மிரட்டிய சுப்மன் கில் | Shubman Gill Century Against Zimbabwe

இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

ஷுப்மன் கில்

ராகுல் 40 ரன்னும், தவான் 30 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஷுப்மன் கில் பொறுப்புடன் ஆடினார். அவர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து 140 ரன்கள் சேர்த்தார்.

சர்வதேச போட்டியில் முதல் சதம் - மிரட்டிய சுப்மன் கில் | Shubman Gill Century Against Zimbabwe

இஷான் கிஷன் அரை சதமடித்து அவுட்டானார். நிதானமாக ஆடிய ஷுப்மான் கில் 82 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சர்வதேச போட்டிகளில் ஷுப்மன் கில்லின் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 முதல் சதம்

ஏற்கனவே இரண்டு தொடரில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி மூன்றாவது தொடரிலும் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவை வாஷ் அவுட் செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.