இப்படியெல்லாம் அவுட் ஆனா அவ்வளவுதான்...ஷுப்மன் கில்லை கண்டித்த முன்னாள் வீரர்!
முன்னாள் வீரர் பிரக்யன் ஓஜா, ஷுப்மன் கில் இப்படியெல்லாம் அவுட் ஆனா அவ்வளவுதான் என்று எச்சரித்துள்ளார்.
பிரக்யன் ஓஜா
கிரெக் சாப்பல், ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவில் ஆடுவதைப் பார்த்து மகத்துவத்துகான வீரர் என்றார். ஐபிஎல் 2022 தொடரில் 16 போட்டிகளில் 483 ரன்களை எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் முதல் ஒருநாள் போட்டியில் அரைசதமும் 2வது போட்டியில் 43 ரன்களையும் எடுத்தார்,
ஆனால் இந்த ஸ்கோரில் அவுட் ஆனார், இது போதாது என்கிறார் பிராக்யன் ஓஜா. ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் அவர் கூறும்போது, “3 மேட்ச்கள் வாய்ப்பிருக்கிறது. முதல் 2 போட்டிகளில் அவர் எப்படி அவுட் ஆனார் என்பதைப் பார்த்தீர்களா? இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஷுப்மன் கில்
நன்றாகத் தொடங்குகிறார் பிறகு கோட்டை விட்டு விடுகிறார். இவர் ஏற்கெனவே 3வது சாய்ஸ் ஓப்பனர் கிடையாது, 4 அல்லது 5வது சாய்ஸ் ஓப்பனராகவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் பார்க்கப்படுகிறார்.
பெரிய ரன்களை எடுக்க வேண்டாமா? முதல் போட்டியில் ரன் அவுட் ஆனார், 2வது போட்டியில் காட் அண்ட் பவுல்டு ஆனார். இது தேவையற்றது, தனக்கு கிடைத்த வாய்ப்புகள் பொன்னானது என்பதை அவர் உணரவில்லை.
சஞ்சு சாம்சனை எடுத்துக் கொள்ளுங்கள். இவருக்கு சில வாய்ப்புகளே கிடைக்கின்றன. கே.எல்.ராகுல் பிட் ஆகிவிட்டால் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே வாய்ப்புக் கிடைத்தால் இரு கைகளாலும் அள்ளிக்கொள்ள வேண்டாமா?” என்றார். மேலும், இப்படியெல்லாம் அவுட் ஆனா அவ்வளவுதான் என்றும் எச்சரித்துள்ளார்.