2 இந்திய வீரர்களை கிளம்ப சொன்ன பிசிசிஐ - என்ன சம்பவம்?

Indian Cricket Team T20 World Cup 2024
By Sumathi Jun 15, 2024 12:49 PM GMT
Report

2 இந்திய வீரர்களை இந்தியா கிளம்பிச் செல்லுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

டி20 உலகக் கோப்பை 

2024 டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் இந்திய அணியின் கடைசி போட்டியில் கனடா அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

shubman gill - avesh khan

இந்நிலையில், நான்கு மாற்று வீரர்களில் சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கானை மட்டும் இந்தியாவுக்கு கிளம்பிச் செல்லுமாறு பிசிசிஐ கூறியுள்ளது. தற்போது இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.

மைதானத்திற்கு கூட வரல; சாரா டெண்டுல்கருடன் ஊர் சுற்றிய சுப்மன் கில்? பிசிசிஐ நடவடிக்கை!

மைதானத்திற்கு கூட வரல; சாரா டெண்டுல்கருடன் ஊர் சுற்றிய சுப்மன் கில்? பிசிசிஐ நடவடிக்கை!

பிசிசிஐ முடிவு

மாற்று துவக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். எனவே, நான்காவது துவக்க வீரராக இருக்கும் சுப்மன் கில்லை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 இந்திய வீரர்களை கிளம்ப சொன்ன பிசிசிஐ - என்ன சம்பவம்? | Shubman Gill Avesh Khan Sent Home By Bcci

மேலும், 15 பேர் கொண்ட அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அத்துடன் ஹர்திக் பாண்டியாவும் நான்காவது வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற்றுள்ளார். மாற்று வீரர்களில் கலீல் அகமது இருப்பதால் ஆவேஷ் கானை அனுப்பவுள்ளனர்.