படுமோசமான ரெக்கார்டு; தோல்விக்கு காரணம் என்ன? ஷுப்மன் கில் பதில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான தோல்விக்கு ஷுப்மன் கில் பதிலளித்துள்ளார்.
ஷுப்மன் கில்
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் ஜிம்பாப்வே, இந்திய அணிக்கு எதிராக மிகக் குறைந்த ஸ்கோரை அடித்து, வெற்றி பெற்ற அணிகளின் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது.
தோல்விக்கான காரணம்
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷூப்மன் கில் பேசியுள்ளார். நாங்கள் நன்றாக பந்துவீசினோம். ஆனால், பேட்டிங்கில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அனைவரும் சிறிது அவசரமாக விளையாடியது போல தெரிகிறது.
பேட்டிங்கில் நேரமெடுத்து சிறப்பாக விளையாடுவது குறித்து பேசினோம். ஆனால், அவ்வாறு நாங்கள் விளையாடவில்லை. ஆட்டத்தின் பாதிக்குள் நாங்கள் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.
நான் ஆட்டமிழந்த விதம் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. 116 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது கடைசி வீரர் வரை வெற்றிக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் ஏதோ தவறு நடந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.