ரசிகனின் அந்த கேள்வி..மூடிட்டு போடா என திட்டிய ஸ்ருதி ஹாசன் - ஷாக் ஆன நெட்டிசன்கள்!

Shruti Haasan Instagram Actress Social Media
By Swetha Jun 21, 2024 04:46 PM GMT
Report

நெட்டிசன் கேட்ட கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் சொன்ன பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ருதி ஹாசன்

உலக நாயகனின் கமல் ஹாசனின் மூத்த மகள் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ரசிகனின் அந்த கேள்வி..மூடிட்டு போடா என திட்டிய ஸ்ருதி ஹாசன் - ஷாக் ஆன நெட்டிசன்கள்! | Shruti Hassan Slams Netizen

இதனை அடுத்து தனுஷ் உடன் இணைந்து ‘3’படத்தில் நடித்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தற்போது தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் ஸ்ருதி ஹாசன் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்.

குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் Ask Me Anything என்ற ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் ஸ்ருதி ஹாசனும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‛Ask Me Anything' என்ற பெயரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

பீரியட்ஸ் பிரச்சனை.. அதெல்லாம் பண்ணவே முடியல - ஓப்பனாக சொன்ன ஸ்ருதி ஹாசன்!

பீரியட்ஸ் பிரச்சனை.. அதெல்லாம் பண்ணவே முடியல - ஓப்பனாக சொன்ன ஸ்ருதி ஹாசன்!

அந்த கேள்வி..

இந்நிலையில், தான் ரசிகர் ஒருவர் ஸ்ருதி ஹாசனிடம், ‛‛தென்மாநில மொழியில் ஏதாவது ஒன்றை கூறுங்கள்'' என கேட்டிருந்தார். இதனை பார்த்து டென்ஷனாகிய ஸ்ருதி ஹாசன், ‛‛ஓகே.. சிறிய வகையிலான இனவாதம் பார்வை என்பது சரியில்லை. எங்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் எனக்கூறுவது சரியில்லை.

ரசிகனின் அந்த கேள்வி..மூடிட்டு போடா என திட்டிய ஸ்ருதி ஹாசன் - ஷாக் ஆன நெட்டிசன்கள்! | Shruti Hassan Slams Netizen

அது அழகானதாகவும் இல்லை. அதோடு எங்களை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு பின்பற்றவில்லை. இதனால் வேடிக்கை காட்டுவது போல் நடந்து கொள்ள முயற்சிக்காதீர்கள். இது தொடரும் பட்சத்தில் ‛மூடிட்டு போடா'' என்று தென்இந்திய மொழியில் கூற விரும்புவேன்'' என கூறியுள்ளார். இந்த விஷயம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.