என்கிட்ட நெருக்கமா வந்து.. யோசிக்கவே முடியல - ஸ்ருதி ஹாசன் வேதனை!
தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி ஹாசன்
உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக விளங்கும் ஸ்ருதிஹாசனுக்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் சந்தித்த கசப்பான அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
கசப்பான அனுபவம்
"என்னை பின்தொடர்ந்து வந்த நபர் யார் என்று தெரியாது. விமான நிலையத்தில் நடந்து சென்றபோது அவர் என் பின்னால் வருவதை கவனித்தேன். எனக்கு மிகவும் நெருக்கமாக அவர் வந்ததால் அசவுகரியமாக இருந்தது.

இதனால் வேகமாக நடந்து வெளியே வந்தேன். காரில் ஏறுவது வரை தொடர்ந்து வந்தார். நான் பயந்து போனேன். நீங்கள் யார் என்று சத்தமாக கேட்டேன். உடனே நழுவி சென்று விட்டார். எனக்கு சொந்தமாக பவுன்சர்கள் வைத்துக்கொள்ளவில்லை.
சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறேன். அதனால்தான் இப்போது வரை பாதுகாப்புக்கு பாடிகார்டுகள் இல்லாமல் இருக்கிறேன். இந்த சம்பவத்துக்கு பிறகு பாடிகார்டு வைத்துக்கொள்ள வேண்டுமோ? என யோசிக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசிய விமானத்தில் ஏறி ஐக்கிய இராச்சியத்திற்கு பறந்த ட்ரம்ப் IBC Tamil