நீங்க வெர்ஜினா என்ற கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த ஸ்ருதிஹாசன்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை ஸ்ருதிஹாசன் வெர்ஜின் குறித்த கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ஸ்ருதிஹாசன்
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் குவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். தனது ரசிகர்களின் கேள்விக்கு எப்போதுமே வெளிப்படையாகவே பதிலளிப்பவர்.
are you a virgin?
இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நெட்டிசன் ஒருவர் நீங்கள் வெர்ஜினா என கேள்வியெழுப்பினார். வெர்ஜின் என்பதை ஆங்கிலத்தில் தவறாக எழுதி இருந்ததை பார்த்த ஸ்ருதிஹாசன்,
முதலில் வெர்ஜின் என்பதன் ஸ்பெல்லிங்கை சரியாக தெரிந்துகொள்ளும்படி அந்த நபருக்கு தரமான பதிலடி கொடுத்தார். அவரின் இந்த பதில் வைரலாகி வருகிறது. தற்போது இவர் நடிப்பில் தெலுங்கில் சலார் திரைப்படம் தயாராகி வருகிறது. இதில், நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், தி அய் என்கிற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார்.