மனநிலை பாதிக்கப்பட்டதாக வதந்தி - விளக்கம் கொடுத்த ஸ்ருதிஹாசன்!
தனக்கு மனரீதியான பிரச்சினை இருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன்
இந்திய சினிமாவில் பலராலும் அறியப்படும் ஸ்ருதி எப்போதுமே திறந்த புத்தகமாகத்தான் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களின் கேள்விக்கு எப்போதுமே வெளிப்படையாகவே பதிலளிப்பவர்.
மனநல பிரச்சனை
இந்நிலையில், தற்போது தெலுங்கு இந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சங்கராத்தியை முன்னிட்டு சிரஞ்சீவி நடிப்பில் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இந்த இரு படங்களிலும் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
இதனிடையே வீர சிம்ஹா ரெட்டி படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்வில்லை. இதற்கு அவர் மனரீதியான பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது
இதற்கு விளக்கம் அளித்த ஸ்ருதிஹாசன், தனக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாகத்தான் தன்னால் வால்டர் வீரய்யா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.