காதலிக்க பிடிக்கும்.. அதை செய்ய பிடிக்கும்.. ஆனால் கல்யாணம் நோ - ஸ்ருதி ஹாசன் பளீச்!
தனது கல்யாணம் மற்று விருப்பங்கள் குறித்து ஸ்ருதி ஹாசன் பேசியுள்ளார்.
ஸ்ருதி ஹாசன்
7-ஆம் அறிவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.
கடைசியாக இவர் நடிப்பில் சளார் என்ற படம் வெளியானது. காதல் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ருதி ஹாசன், பொதுவாக திருமணம் குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்து விடுவது வழக்கம்.
ஆனால் தற்போது இவர், அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மனதில் பட்டத்தை பளீச் என கூறியுள்ளார். அதாவது, எனக்கு ஒருவருடன் ரிலேஷன் ஷிப்பில் இருப்பது மிகவும் பிடிக்கும். காதலிப்பது மிகவும் பிடிக்கும்.
கல்யாணம்
யாருடனாவது என்னை இணைத்துக்கொள்ள நான் விரும்பினாலும், இதுவரை எனக்கு மிகவும் ஸ்பெஷலான நபர் என்று யாரையும் கூற முடியாது. அப்படிப்பட்ட நபரை இதுவரை நான் பார்க்கவில்லை. இது என்னுடைய சொந்த சித்தனை மட்டும் தான். திருமணத்தை பற்றி நான் இதுவரை யோசித்தது இல்லை.
அதில் எனக்கு இதுவரை ஆர்வமும் இல்லை என கூறியுள்ளார். இப்போது திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை என்றாலும், வருங்காலத்தை யாராலும் கணிக்க முடியாது என்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
