அதுக்கு நான் சரிபட்டு வரவே மாட்டேன் - ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்!

Kamal Haasan Shruti Haasan Tamil Cinema
By Sumathi Jun 16, 2024 05:30 PM GMT
Report

 கமல் ஹாசனின் பயோபிக்கை இயக்குவீர்களா என்ற கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன்

இந்திய சினிமாவில் பலராலும் அறியப்படும் ஸ்ருதி எப்போதுமே திறந்த புத்தகமாகத்தான் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களின் கேள்விக்கு எப்போதுமே வெளிப்படையாகவே பதிலளிப்பவர்.

shruti haasan

அண்மையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் மியூசிக் ஆல்பம் ஒன்றை செய்திருந்தார். அது வெளியாகி நல்ல வரவேற்பையே பெற்றது.

லோகேஷை லவ் பண்ணாம எப்படி; இவ்வளவு நெருக்கம் இதனால்தான் - ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்!

லோகேஷை லவ் பண்ணாம எப்படி; இவ்வளவு நெருக்கம் இதனால்தான் - ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்!

கமல் ஹாசனின் பயோபிக்?

இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசனின் பயோபிக்கை இயக்குவீர்களா என ஸ்ருதி ஹாசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், வாய்ப்பே இல்லை. அப்பாவின் வாழ்க்கைய படமாக எடுக்க நான் சரியான ஆள் இல்லை. நல்ல நல்ல இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அப்பாவின் வாழ்க்கையை நல்லபடியாக படமாக எடுப்பார்கள்.

அதுக்கு நான் சரிபட்டு வரவே மாட்டேன் - ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்! | Shruti Haasan Open About Kamal Haasan Biopic

என் அப்பா அல்டிமேட் என எப்பொழுதும் நினைப்பது உண்டு. அப்பா ரொம்ப கூல். ஒரு நாள் நான் செட்டுக்கு சென்றபோது அவர் இயக்குநர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார்.

யார் இந்த ஆள், என் அப்பா வகுப்பறையில் இருப்பது போன்று நடக்க வைக்கிறாரே என நினைத்தேன். அதை பார்த்ததும் இயக்குநராக இருப்பது ரொம்ப கூலான வேலை என நினைத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.