தனுஷோடு சேர்ந்ததால் வந்த பிரச்சனை - ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!
ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சலே என்பவரை டேட் செய்து வந்தார். அவருடன் பிரேக்கப் ஆனது. அதன் பின்னர் மும்பையை சேர்ந்த டூடுல் ஆர்ட்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகாவை காதலித்தார். கடந்த சில மாதங்களூக்கு முன்னதாக அவருடனும் பிரேக்கப் ஏற்பட்டது.
பட வாய்ப்பு
தற்போது திருமணமே தேவையில்லை என்றும் யாராக இருந்தாலும் நட்புடனே நிறுத்திக் கொள்ளப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 3. அனிருத் இசையில் வெளியான அந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட்.
ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை. இதுகுறித்து ஸ்ருதிஹாசன், அந்த படத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் புதிய படங்களில் நடிக்க யாருமே அழைக்கவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.