12 கிலோ எடை குறைத்த ரேஷ்மா; எப்படி தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் க்ளிக்ஸ்
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி எடை குறைத்துள்ள ஃபோட்டோஸ் வைரலாகி வருகிறது.
ரேஷ்மா பசுபுலேட்டி
இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தில் சூரியின் மனைவியாக நடித்து பிரபலமானர்.
தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
வைரல் ஃபோட்டோஸ்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ஃபோட்டோக்களை பகிர்வது வழக்கம். தற்போது 12 கிலோ குறைத்து இருப்பதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சில பிரச்னைகள் காரணமாக எனது உடல் எடை அதிகரித்துவிட்டது. அதனால் கடந்த 9 மாதங்களாக உணவு கட்டுப்பாடு மற்றும் ஜிம்மில் தீவிரமான ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு தற்போது 12 கிலோ வரை உடல் எடையை குறைத்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.