ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர் - கூலாக பதில் சொன்ன ஸ்ரேயாவின் கணவர்

Shriya Saran Indian Actress
By Sumathi Feb 23, 2023 08:10 AM GMT
Report

ரசிகரின் கமெண்டிற்கு ஸ்ரேயாவின் கணவர் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா சரண் தனது அற்புதமான நடன அசைவுகள், அசத்தலான உருவம் மற்றும் கவர்ச்சியான திரை இருப்பு ஆகியவற்றால் அறியப்பட்டவர். 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ஆண்ட்ரே கோஷீவை மணந்தார்.

ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர் - கூலாக பதில் சொன்ன ஸ்ரேயாவின் கணவர் | Shriya Saran Husband Epic Reply To A Lewd Fan

மும்பை தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து விட்டு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது கன்னடத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள 'கப்ஜா' படத்தில் நடித்து இருக்கிறார்.

ஆபாச கமெண்ட்

இந்தப்படத்தை ஆர்.சந்துரு இயக்கியுள்ளார். ஸ்ரேயா தற்போது ஸ்பெயினில் இருக்கிறார். தனது கணவருடன் எடுத்த படங்களையும் வீடியோகளையும் தனது சமூக ஊடகத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர் - கூலாக பதில் சொன்ன ஸ்ரேயாவின் கணவர் | Shriya Saran Husband Epic Reply To A Lewd Fan

இந்நிலையில், இன்ஸ்டா லைவில் ரசிகர் ஒருவர் உங்க மார்பகங்கள் சூப்பர் என எல்லை மீறி கமெண்ட் செய்த நிலையில் ஸ்ரேயா அதை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார். உடனடியாக அருகே இருந்த நடிகை ஸ்ரேயாவின் கணவர் பேசியது தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

நடிகை ஸ்ரேயாவுக்கு அக்கறையாக ஜூஸ் போட்டுக் கொண்டிருந்த அவரது கணவர் கூலாக ”நான் உங்களுடன் உடன்படுகிறேன் நண்பர்களே”(I agree with you guys) எனத் தெரிவித்தார்.