கண்ணை மூட வைத்து பிரபல நடிகையை ஏமாற்றிய கணவர்
நடிகை ஸ்ரேயாவின் கணவர் மேஜிக் செய்வது போல, கண்ணை மூடவைத்து அவரை ஏமாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய், ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு கனமான கதை அம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
திருமணத்திற்குப் பிறகு கணவருடன் செம ரொமான்டிக்கான க்யூட் படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஸ்ரேயா தற்போது சிரிக்கவும் வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஸ்ரேயாவின் கணவர் மேஜிக் செய்வது போல, கண்ணை மூடவைத்து ஸ்ரேயாவை ஏமாற்றுகிறார். இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.