கேப்டனாக தோனி கூட செய்யாதது!!கோப்பை மட்டுமில்ல - அசால்ட்டாக முடித்து காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்!!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
சொதப்பிய ஹைதராபாத்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத் அணிக்கு தொடர்ந்து பெரிய சறுக்கலே காத்திருந்தது.
அதிரடி துவக்கம் அமைத்து வந்த டிராவிஸ் ஹெட் 0 ரன், அபிஷேக் சர்மா 2, ராகுல் திரிபாதி 9, மார்க்ரம் 20, நிதிஷ் குமார் ரெட்டி 13, கிளாசன் 16, அஹ்மத் 8, சமாத் 4, பேட் கம்மின்ஸ் 24, ஜெயதேவ் 4 என அனைவருமே சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை
18.3 ஓவர்களில் வெறும் 113 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. சிறிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி அதிரடியாக ஆடி 10.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
2012, 2014 ஆம் ஆண்டுகளில் கம்பீர் தலைமையிலும், தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலும் கோப்பைய வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய சாதனை ஒன்றை செய்துள்ளார். இரன்டு அணிகளை கேப்டனாக இறுதி போட்டிக்கு அழைத்துவந்த பெருமையோடு கோப்பையை வென்றுள்ளார்.