2 கோடி பெட் - இந்த அணியே கோப்பையை வெல்லும் - சவால் விட்ட ராப் பாடகர்
இன்று ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல்
மார்ச் மாதம் துவங்கிய ஐபிஎல் தொடர் இறுதி போட்டியை எட்டியுள்ளது. பெரும் ஆதிக்கத்தை செலுத்திய அணிகளாக லீக் தொடரில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி மாலை 7:30'க்கு துவங்குகிறது. ஏற்கனவே Qualifier -1 சுற்றில் கொல்கத்தா அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல லீக் தொடரில் மோதிய போதும் கொல்கத்தா அணியே 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2 கோடிக்கு பந்தயம்
இன்று 3-வது முறையாக இந்த சீசனில் இந்த இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளுமே வெற்றி பெரும் முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் இன்று கனடா நாட்டை சேர்ந்த பிரபல ராப் பாடகரான டிரேக் கிரஹாம் (Drake Graham), இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிப்பெறும் என 2 கோடி ரூபாவை பந்தயம் கட்டியுள்ளார்.
Two Captains. One Trophy ?
— IndianPremierLeague (@IPL) May 25, 2024
..And an eventful Chennai evening ??️
All eyes on the #Final ?#TATAIPL | #KKRvSRH | #TheFinalCall pic.twitter.com/5i0nfuWTGN
வெளிநாடுகளில் இது போன்று பந்தயம் கட்டுவது இயல்பு என்றாலும், இந்தியாவில் இது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாகும். ஆனால், கணிப்புகள் எப்போதும் வெளிவருவது இயல்பே.