இது ட்ரோல்ஸ் இல்ல...எல்லை மீறி நடக்கும் ஆர்சிபி ரசிகர்கள் - தீபக் சாஹர் சகோதரி வேதனை !!
சென்னை அணியை தொடர்கடிதத்தை பெங்களூரு அணி ஆரவாரமாக கொண்டாடியது. தோனியின் கடைசி போட்டியாக இருக்கக்கூடும் என கூறப்படும் நிலையில், அவரை கூட சரியாக வழியனுப்ப பெங்களூரு அணி வீரர்கள் வரவில்லை என சென்னை அணி ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
மைதானத்தில் ஆக்ரோஷமாக கொண்டாடிய வீரர்களை அடுத்து பெங்களுரு ரசிகர்கள், சமூகவலைத்தளங்களில் கடுமையான ட்ரோல்ஸ் போடத்துவங்கினர்.
அதே நேரத்தில், Eliminator போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் பெங்களூரு தோல்வியடைந்ததை அடுத்து, சென்னை அணி ரசிகர்கள் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பல வகையான மீம்ஸ்களை பெங்களூரு அணியை நோக்கி வைத்து வருகிறார்கள்.
கடுமையாக இருதரப்பு ரசிகர்களுக்கும் மோதிக்கொண்டு வரும் நிலையில், தீபக் சாஹர் சகோதரி ஆர்சிபி ரசிகர்கள் எல்லை மீறி விமர்சிப்பதாக கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவரின் எக்ஸ் தளபதிவின் தமிழாக்கம் வருமாறு,
CSK வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சமூக ஊடகங்களில் மக்கள் எப்படி தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகவும் வேடிக்கையானது... பெரும்பாலும் போலி சுயவிவரங்கள்! இந்த முகம் தெரியாதவர்களுடன் நான் அனுதாபம் கொள்கிறேன். கடவுள் அவர்களை ஆசிர்வதிப்பாராக!
It’s really funny how people are abusing CSK players and their families on social media…mostly with fake profiles!
— Malti Chahar?? (@ChaharMalti) May 24, 2024
I empathise with these faceless people..hope they recover and do something productive with their time and energy! God bless them!