முற்றும் மோதல் - தயாராகும் சென்னை - விராட் எதிரியை அணியில் சேர்த்த சூப்பர் கிங்ஸ்
விராட் கோலி மற்றும் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் இருவருக்கும் இடையே நடைபெற்ற பிரச்சனையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
விராட் - நவீன் பிரச்சனை
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் போது, லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இருவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.
அதன் நீட்சியாக லக்னோ அணியின் ஆலோசகராக அப்போது இருந்த கவுதம் கம்பீருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் விராட். விராட் எப்போதும் தனது ஆக்ரோஷத்தை மைதானத்தில் வெளிக்காட்டுவதை குறைப்பதில்.
பெரும் சலசப்பான இந்த விஷயம் தான் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மிக பெரிய விவாத பொருளாக மாறியது.
சென்னையில் நவீன்
இந்த சூழலில் தான் தற்போது மற்றுமொரு தகவல் வெளிவந்துள்ளது. ஐபிஎல் தொடர் போலவே நடைபெறும் Major League Cricket - MLC தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நவீன் உல் ஹக்.
சென்னை அணியின் மற்றுமொரு வெர்சனாக பார்க்கப்படும் இந்த தொடரில் அவர் அணியில் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து சென்னை அணியிலும் அவர் இடம் பெறுவாரா? என்ற ஆர்வம் எழுந்துள்ளது.
சென்னை - பெங்களூரு அணிகள் பரம எதிரியாக பார்க்கப்படும் நிலையில், இந்த முடிவை சென்னை அணி எடுக்குமா? என்பதும் கேள்விக்குறியான ஒன்றே.