பொத்திட்டு இருந்திருக்கணும் - இல்லனா இப்படி தான் - விளாசிய முன்னாள் வீரர்
சென்னை அணிக்கு எதிரான பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டம் இன்னும் விமர்சனத்தை பெற்று வருகின்றது.
பெங்களூரு தோல்வி
27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வெற்றி கொண்ட பெங்களூரு, Eliminator போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோற்று வெளியேறியுள்ளது.
சென்னை அணியை வெற்றி பெற்றதற்கு பிறகு மிகவும் ஆகரோசமாக கொண்டாடிய ஆர்சிபி வீரர்கள் மற்றும் ரசிகர்களை சென்னை அணியின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
பொத்திட்டு
அப்படிதான் சென்னை அணியின் ஆதரவாளரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தனது யூடியூப் சேனலில் பேசும் போது கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
அவர் பேசும் போது இது தான் வாயை பொத்திட்டு இருக்கனும். ஆண்டவன்'னு ஒருத்தன் எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கான். கிரிக்கெட் விளையாடும் போது வாயை மூடிக்கொண்டு ஆடுவது அவசியம்.
வாழ்க்கையில் ஒரு விஷயம் செய்யும் போது, தயவு செய்து வாயை மூடிக் கொண்டு வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வேறு எதுவும் பேசாதீர்கள் என பேசினார்.