வார்த்தையை விட்ட ஷ்ரேயாஸ் - சமாதானப்படுத்தி கேப்டன் பதவி கொடுத்த பிசிசிஐ!
ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய ஏ அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இதில் இந்திய அணியில் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஷ்ரேயாஸ், 'நீங்கள் அணியில் விளையாட தகுதியானவர் இல்லை என்று நீங்கள் உணரும்போது ஏமாற்றம் ஏற்படுகிறது.
பிசிசிஐ முடிவு
ஆனால் அதே நேரத்தில், மற்றொரு வீரர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அணிக்காக தனது சிறந்ததைக் கொடுத்தால், நீங்கள் அவரை ஆதரிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதி இலக்கு அணியின் வெற்றி.
அணி வெற்றி பெறும்போது, அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் உங்கள் வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டு நாள் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாதம் 16 ஆம் தேதி லக்னோவில் தொடங்கும் தொடரின் இரண்டாவது போட்டி செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.