ரோகித்துக்கு பின் அவர்தான் கேப்டன்; கில், பண்ட் இல்லை - இந்திய முன்னாள் வீரர்!
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு குறித்து அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.
அடுத்த கேப்டன்?
கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பின் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ளார்.
அம்பத்தி ராயுடு கருத்து
இதற்கிடையில், ரோகித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில் ஒருநாள் போட்டி அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு,
“அவருடைய (ஸ்ரேயாஸ் ஐயர்) அசாதாரண அமைதியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சாம்பியனாக மாற்றினார். அதன்பிறகு, ஒரு இளம் பஞ்சாப் அணியை வழிநடத்தினார்.
ஆனால் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் ஒரு அசாதாரண கேப்டன். அவர் விரைவில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.