நல்லா பவுலிங் போடும்போது கழட்டி விட்டுட்டாங்க.. இந்திய அணியை விளாசிய பிரபலம்
நல்லா பந்துவீசிய பவுலரை இந்திய அணி கழட்டி விட்டதாக பரத் அருண் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர்
டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தது. இறுதியில் இந்திய அணியானது இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது.
இதில் குறிப்பாக முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட நிலையில், பிரசித் கிருஷ்ணாவும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
பரத் அருண் ஆதங்கம்
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண், முதல் டெஸ்ட் போட்டியின் போது பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் சில தவறுகளை செய்தார். ஆனால் இரண்டாவது போட்டியின் போது அவர் தன்னுடைய லைன் மற்றும் லென்த்தை கண்டுபிடித்து சிறப்பாக வீசியிருந்தார்.
ஆனால் அதற்கடுத்து இரண்டு போட்டியில் அவரை விளையாட வைக்கவில்லை. அவருக்கு பதிலாக இந்தியாவில் இருந்து ஒரு புதிய வீரரை கொண்டு வந்து விளையாட வைத்தார்கள். அதன்பின்னர் அவரும் வெளியேற்றப்பட கடைசி போட்டியில் மீண்டும் பிரசித் கிருஷ்ணா அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
தான் செய்யும் தவறுகளில் இருந்து பாடத்தை திருத்திக் கொண்டு மீண்டும் சிறப்பாக பந்துவீசும் போது தான் அவரை இந்திய அணி வெளியேற்றியது. இந்த தொடரில் என்னை பொறுத்தவரை பிரசித் கிருஷ்ணா நல்ல முன்னேற்றத்தை கண்டு மிகச்சிறப்பாக பந்துவீசியிருந்தார் என தெரிவித்துள்ளார்.