பாபர் அசாம் நீக்கப்பட்டது ஏன்? காரணத்தை போட்டுடைத்த பயிற்சியாளர்!
பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாபர் அசாம்
ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் அணியாக ஆசிய கோப்பைக்கான அணியை நேற்று (ஆக. 17) பாகிஸ்தான் அறிவித்தது.
இந்த அணிக்கு சல்மான் அலி ஆகாவை கேப்டனாக நியமித்துள்ளனர். இதில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தலைமை பயிற்சியாளர் மைக் ஹேசன்,
பாபர் அசாம் சிறந்த வீரர் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் பேட்டிங்கில் சில விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் தடுமாறுகிறார். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கின்றது.
பயிற்சியாளர் தகவல்
இந்த விஷயத்தில் அவர் கடுமையாக பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அதன்படி, அவரும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பாபர் அசாம் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் பெற வேண்டும்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் முன்னேற்றம் அடையலாம் என நினைக்கிறேன். பாகிஸ்தான் அணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கே இடம் கிடைத்து இருக்கிறது. உதாரணத்திற்கு ஃபர்கான் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் மூன்றில் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற ரன் ரேட் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளார்.